» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அ.தி.மு.க. - அ.ம.மு.க. இணையுமா? கடம்பூர் ராஜூ பேட்டி

செவ்வாய் 4, மே 2021 8:30:08 AM (IST)

அ.தி.மு.க.வுடன் அ.ம.மு.க. இணையுமா? என்பதற்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தனது கருத்தை தெரிவித்துள்ளார். 

கோவில்பட்டி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டு தொடர்ந்து 3-வது முறையாக வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: கடந்த 10 ஆண்டுகளாக கோவில்பட்டி தொகுதியில் செய்த பணிகள் மற்றும் அ.தி.மு.க. அரசின் சாதனைகளுக்காக பொதுமக்கள் எனக்கு ‘ஹாட்ரிக்’ வெற்றியை வழங்கி உள்ளனர். இதற்காக மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

கடந்த 10 ஆண்டுகளாக தொகுதி மக்களுக்கு தேவையான நலத்திட்டங்களை கேட்டு நிறைவேற்றினோம். இனி 5 ஆண்டு காலமும் மக்களுக்கு தேவையான நலத்திட்டங்களை போராடி பெற்று தருவேன். கோவில்பட்டி தொகுதியை சிறப்பான தொகுதியாக மாற்றுவதற்கு முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றுவேன். அ.தி.மு.க.வுடன் அ.ம.மு.க. இணையுமா? என்று கேட்கிறீர்கள். இதுகுறித்து கட்சி மேலிடம்தான் முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து

மே 6, 2021 - 09:32:08 AM | Posted IP 162.1*****

வெட்டி பந்தா டுபாக்கூர்

adminமே 4, 2021 - 01:26:43 PM | Posted IP 108.1*****

20 rupees note venam.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thalir Products


Nalam Pasumaiyagam
Black Forest Cakes
Thoothukudi Business Directory