» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பட்டாசுடன் காரில் வந்த திமுகவினர் 14பேர் கைது

திங்கள் 3, மே 2021 11:51:55 AM (IST)

தூத்துக்குடியில் தடையை மீறி பட்டாசு வெடிக்க முயன்றதாக திமுகவினர் 14பேரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி முத்தையாபுரம் சோதனைக் சாவடியில் சப் இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையிலான போலீசார் வாகன சோதனை ஈடுபட்டிருந்தனர். அப்போது திமுக கொடி கட்டி வந்த காரை போலீசார் நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது காருக்குள் பத்தாயிரம் வாலா சரவெடி பாக்கெட்டுக்கள் இருப்பது தெரியவந்தது. 

இதையடுத்து காரில் வந்த தூத்துக்குடி சுனாமி நகரைச் சேர்ந்த அந்தோணி ராஜா மகன் அருண் (31), தாளமுத்துநகரைச் சேர்ந்த ராமசாமி மகன் ரமேஷ்குமார் (26), மாப்பிள்ளையூரணியைச் சேர்ந்த வள்ளிநாயகம் மகன் முத்து (39), மட்டக்கடை அருணாசலம் மகன் முத்துகுமார் (25), சண்முகபுரம் அந்தோணி மகன் ஸ்டீபன் (24), சின்னகடை தெருவைச் சேர்ந்த சேசு மகன் சுமன் (40) ஆகிய 6பேரை கைது செய்தனர். 

இதுபோல் மற்றொரு காரில் வந்த தூத்துக்குடி கணேசன் நகரைச் சேர்ந்த பிளவர் மகன் டார்வின் (27), மரியதாஸ் மகன் ஸ்டார் வின், சுந்தரவேல் புரத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் மகன் சுரேஷ் (29), காந்தி நகரைச் சேர்ந்த ஆஞ்சலோ மகன் லயோலா (26), லயன்ஸ் டவுணைச் சேர்ந்த தாமஸ் மகன் போஸ்கோ (26), ஆரோக்கியபுரத்தைச் சேர்ந்த முத்துலிங்கம் மகன் மகேஸ் (27), மணப்பாட்டைச் சேர்ந்த ரவீந்திரன் மகன் அசோக் (37), தூத்துக்குடி இந்திரா நகரைச் சேர்ந்த மோகன் மகன் ஆனந்த் (31) ஆகிய 8பேரை கைது செய்தனர்.

அவர்கள் மீது அரசு உததரவை பின்பற்றாமல் நோய் கிருமியை பரப்பும் விதமாக வாகனத்தில் 10ஆயிரம் வாலா வெடி் பாக்கெட்டுகளுடன் வந்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் கைது செய்யப்பட்ட அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Thalir ProductsBlack Forest CakesNalam PasumaiyagamThoothukudi Business Directory