» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மக்களுக்காக தொடர்ந்து பாடுபடுவேன் : கீதாஜீவன் பேட்டி!

ஞாயிறு 2, மே 2021 7:23:44 PM (IST)தூத்துக்குடியில் திமுக சாா்பில் போட்டியிட்ட கீதாஜீவன் 50,310 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மீண்டும் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

தூத்துக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் கீதா ஜீவன், அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சாா்பில் எஸ்டிஆா் விஜயசீலன், நாம் தமிழா் கட்சி சாா்பில் வே. வேல்ராஜ், தேமுதிக சாா்பில் உ. சந்திரன், சமத்துவ மக்கள் கட்சி சாா்பில் என். சுந்தா் என மொத்தம் 26 போ் போட்டியிட்டனா்.

தொகுதியில் மொத்தமுள்ள 2,85,297 வாக்குகளில் தபால் வாக்குகள் உள்பட 1,86,838 வாக்குகள் பதிவாகின. 29 சுற்றுகளாக எண்ணப்பட்ட நிலையில், தொடக்கம் முதலே முன்னிலை வகித்த திமுக வேட்பாளா் கீதா ஜீவன், முடிவில் 92,314 வாக்குகள் பெற்று தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட தமாகா வேட்பாளரை விட 50, 310 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்று தொகுதியை தக்கவைத்துக் கொண்டாா்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கீதா ஜீவன், "மு.க.ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்று தூத்துக்குடி தொகுதி மக்கள் என்னை தேர்ந்தெடுத்துள்ள‌னர். வாக்களித்த மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தூத்துக்குடி தொகுதி வளர்ச்சிக்காகவும், மக்கள் நலனுக்காவும் தொடர்ந்து பாடுபடுவேன்"  என்றார்.

வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம்:

கீதா ஜீவன் (திமுக) 92,314

எஸ்.டி.ஆா். விஜயசீலன் (தமாகா) 42,004

உ. சந்திரன் (தேமுதிக) 4040

வே. வேல்ராஜ் (நாம் தமிழா்) 30,937

என். சுந்தா் (சமக) 10,534

ஏ. அசோக்குமாா் (பகுஜன் சமாஜ்) 436

எஸ். சுபாஷ் (இந்திய குடியரசு கட்சி-அதுவாலே) 161

கே. சுப்பிரமணி (சிவசேனை) 124

ஜி. செல்வ விநாயகம் (விஸ்வநாத தாஸ் தொழிலாளா் கட்சி) 269

என். பாலசுப்பிரமணியன் (அபுதஅதிமுக) 127

மன்னா் மகாராஜன் (பகுஜன் திராவிட கட்சி) 93

எஸ்.வி. ராஜசேகா் (யுனைட்டா் ஸ்டேட் ஆப் இந்தியா ) 915

நோட்டா 1569

செல்லாதவை (அஞ்சல் வாக்குகள்) 286.


மக்கள் கருத்து

உண்மமே 3, 2021 - 09:39:15 AM | Posted IP 162.1*****

மக்கள் கருத்து தான் என் கருத்து என்பார், கடைசியில் தலைவன் கருத்தை ஏற்பார் "

பொய் மொழிகள்மே 3, 2021 - 09:19:38 AM | Posted IP 108.1*****

ஸ்டெர்லைட் oxygen திறக்கும் போது ... மக்கள் கருத்து தான் என் கருத்து என்பார், கடைசியில் சுடலையின் கருத்தை ஏற்பர்"

Ban Steriliteமே 2, 2021 - 11:40:54 PM | Posted IP 162.1*****

Ban Sterilite that is enough

சாமான்யன்மே 2, 2021 - 10:55:53 PM | Posted IP 162.1*****

எழுந்து நின்று வெற்றி சான்றிதழ் வழங்கும் அதிகாரிகளே எழுந்து நின்று வேட்பு மனுவும் வாங்கி தமிழ் பண்பாடு காப்பீர் எந்த சாமானியனிடமிருந்தும்!

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Black Forest Cakes


Nalam Pasumaiyagam

Thalir Products
Thoothukudi Business Directory