» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி - தமிழக அரசு அரசாணை வெளியீடு!

வெள்ளி 30, ஏப்ரல் 2021 4:19:07 PM (IST)

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்காக அனுமதி அளிப்பது தொடர்பாக, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா வெளியிட்டுள்ள அரசாணையில், "ஸ்டெர்லைட் ஆலையைக் கண்காணிக்க தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு குழுவின் உறுப்பினர்களாக தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி., சார் ஆட்சியர், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், ஆக்சிஜன் தொழிற்சாலை குறித்த தொழில்நுட்ப அறிவு சார்ந்த அரசு அதிகாரி, உச்ச நீதிமன்றம் நியமித்த இரண்டு சுற்றுச்சூழல் நிபுணர்கள் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். 

ஸ்டெர்லைட் ஆலை குறித்து இரண்டு வாரத்துக்கு ஒருமுறை அறிக்கை அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலை ஜூலை 31ஆம் தேதி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது." இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு அரசாணை வெளியிட்டதைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் விரைவாக ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Nalam Pasumaiyagam

Thalir ProductsBlack Forest CakesThoothukudi Business Directory