» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தொழில் அதிபரிடம் ரூ.18 லட்சம் மோசடி: எஸ்பியிடம் புகார்

புதன் 21, ஏப்ரல் 2021 8:51:51 AM (IST)

மருத்துவ உபகரணங்கள் விற்பனை செய்வதாக தொழில் அதிபரிடம் ரூ.18 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக தூத்துக்குடி எஸ்பியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

நெல்லை மகராஜநகரை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். இவர் நெல்லையில் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் கடந்த 26.1.21 அன்று புது டெல்லியை சேர்ந்த மருத்துவ உபகரணங்கள் விற்பனை நிறுவன உரிமையாளர் சுமித் பரத்வாஜ் என்பவரிடம் இருந்து மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்காக ஆன்லைன் மூலம் ஒப்பந்தம் செய்து உள்ளார். தொடர்ந்து சுமித்பரத்வாஜ் என்னென்ன பொருட்கள் அனுப்பப்படுகிறது? என்ற விவரங்கள் அடங்கிய பட்டியலை அனுப்பினாராம்.

இதனால் கல்யாணசுந்தரம் தூத்துக்குடியில் உள்ள வங்கியில் இருந்து சுமித் பரத்வாஜ் வங்கி கணக்குக்கு ரூ.18 லட்சத்து 37 ஆயிரம் பணத்தை அனுப்பி வைத்தாராம். ஆனால் சுமித்பரத்வாஜ் பணத்தை பெற்றுக் கொண்டு, பொருட்களை அனுப்பாமல் மோசடி செய்து உள்ளார். இது குறித்து கல்யாணசுந்தரம் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமாரிடம் புகார் மனு கொடுத்தார். மனுவை விசாரித்த எஸ்பி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதன்பேரில் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து

adminApr 21, 2021 - 09:33:30 AM | Posted IP 162.1*****

bharadwaj naale thirudanthan

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Nalam PasumaiyagamThalir Products

Black Forest CakesThoothukudi Business Directory