» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த பெண் பரிதாப சாவு

புதன் 21, ஏப்ரல் 2021 8:44:16 AM (IST)

கோவில்பட்டியில் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த ஆடிட்டர் மனைவி பரிதாபமாக இறந்தார்..

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தனுஷ்கோடியாபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (52). ஆடிட்டராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ராஜேஸ்வரி (48). இவர்களது மகள் ஸ்ரீசுபா(18) விருதுநகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். 

இந்நிலையில் நேற்று காலையில் ராஜேஸ்வரி வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் தண்ணீர் இருக்கிறதா? என்று மூடியைத் திறந்து பார்த்தபோது, எதிர்பாராதவிதமாக தொட்டிக்குள் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. வெளியே சென்றிருந்த சீனிவாசன் சிறிது நேரத்தில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது மனைவியை காணாமல் தேடியுள்ளார். வீட்டின் பின்பக்கம் சென்று தேடிப் பார்த்தபோது தண்ணீர் தொட்டிக்குள் ராஜேஸ்வரி அசைவற்று கிடந்ததை பார்த்து கூச்சலிட்டுள்ளார். 

இதையடுத்து அக்கம் பக்கத்தினர் வந்த ராஜேஸ்வரியை மீட்டு கோவில்பட்டி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ராஜேஸ்வரி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes



Thalir Products


Nalam Pasumaiyagam





Thoothukudi Business Directory