» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சாத்தான்குளம் வழக்கு ஆவணங்களை கேட்டு சப்-இன்ஸ்பெக்டர் மனு

புதன் 21, ஏப்ரல் 2021 8:34:51 AM (IST)

சாத்தான்குளம் வழக்கு ஆவணங்களை கேட்டு சப்-இன்ஸ்பெக்டர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின்போது, இதுபற்றி விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று உயர் நீதிமன்றம்  அறிவித்தது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் காவல் நிலையத்தில் தாக்கப்பட்டு இறந்த வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த இரட்டைக்கொலை வழக்கில் ஏற்கனவே சி.பி.ஐ. போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கில் கைதான போலீசார் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கில் கைதான சப்-இன்ஸ்பெக்டர் ரகுகணேஷ், மதுரை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். 

அதில், "எனக்கு எதிரான வழக்கு விசாரணை மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. தாக்கல் செய்த ஆவணங்களை எனக்கு வழங்குமாறு கேட்ட மனு மாவட்ட நீதிமன்றத்தில் தள்ளுபடியானது. இதுவரை வழக்கு தொடர்பான ஆவணங்கள் எனக்கு வழங்கப்படவில்லை. ஆவணங்களை வழங்கினால்தான் வழக்கை என்னால் எதிர்கொள்ள முடியும். எனக்கு எதிராக பொய் சாட்சியம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் தவறான குற்றச்சாட்டுகள் உள்ளன. இதை நீக்கக் கோரிய மனுவையும் விசாரணை நீதிமன்றம் நிராகரித்தது. 

எனவே எனக்கு எதிரான வழக்கு தொடர்பான ஆவணங்களை கேட்ட எனது மனுவையும், பொய் சாட்சியம் மற்றும் தவறான குற்றசாட்டுகளை நீக்கவும் கோரிய மனுக்களை தள்ளுபடி செய்த உத்தரவையும் ரத்து செய்ய வேண்டும். வழக்கு தொடர்பான ஆவணங்களை எனக்கு தர உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி சத்திகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இதுகுறித்து சி.பி.ஐ.யின் கூடுதல் கண்காணிப்பாளர் தரப்பில் பதில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதை பதிவு செய்துகொண்ட நீதிபதி, விரிவான உத்தரவுக்காக இந்த வழக்கை ஒத்திவைப்பதாக உத்தரவிட்டார்.


மக்கள் கருத்து

HumanApr 21, 2021 - 02:10:22 PM | Posted IP 108.1*****

No Mercy to the Killer Police.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thalir Products


Black Forest Cakes

Nalam PasumaiyagamThoothukudi Business Directory