» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மண் திருட்டில் ஈடுபட்டவர் கைது: மினி லாரி பறிமுதல்

புதன் 21, ஏப்ரல் 2021 8:30:46 AM (IST)

தூத்துக்குடி அருகே மண் திருட்டில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர். மினி லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் அருகே உள்ள நட்டாத்திஓடை பகுதியில் மினி லாரியில் சிலர் மண் திருட்டில் ஈடுபட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சாயர்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மேரிஜெசிந்தா, சப்- இன்ஸ்பெக்டர் சாம்அருள்ராஜ் ஆகியோர் தலைமையில் போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மினி லாரியில் சிலர் மண் ஏற்றிக் கொண்டிருந்தனர். 

போலீசார் வருவதை பார்த்ததும் மண் திருட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 3 பேர் தப்பி ஓடினர். போலீசார் துரத்தி சென்று ஒருவரை பிடித்தனர். விசாரணையில், அவர் கூட்டாம்புளியை சேர்ந்த மாயாண்டி மகன் சின்னதுரை (வயது45) என தெரிய வந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சாயர்புரம் போலீசார் அவரை கைது செய்தனர். மண் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட மினிலாரியும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மற்ற 2 பேரை தேடிவருகின்றனர்.


மக்கள் கருத்து

pandiApr 21, 2021 - 10:49:43 AM | Posted IP 162.1*****

o my god

eleyApr 21, 2021 - 09:34:27 AM | Posted IP 162.1*****

name pathale therithu

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam


Thalir ProductsBlack Forest Cakes

Thoothukudi Business Directory