» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு : பொதுமக்கள் திடீர் போராட்டம்

புதன் 21, ஏப்ரல் 2021 8:28:25 AM (IST)

சாத்தான்குளத்தில் குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட 4-வது வார்டு அழகம்மன் கோவில் தெருவில் குடியிருப்பு வீடுகள் இருக்கும் பகுதியில் தனியார் நிறுவனம் சார்பில் செல்போன் டவர் அமைக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அந்த நிறுவனம் செல்போன் டவர் அமைக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. இதையொட்டி அப்பகுதிமக்கள் செல்போன் டவர் அமைக்கப்பட்டால் குடியிருப்பு வீடுகள் பாதிக்கப்படும், கர்ப்பிணி பெண்கள் பாதிக்கப்படுவர், கதிர்வீச்சால் அதில் பல பிரச்சினைகள் ஏற்படும் என எதிர்ப்பு தெரிவித்து செல்போன் டவர் அமைக்க கூடாது என மாவட்ட ஆட்சிய ர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்துள்ளனர்.

மேலும் அதே பகுதியில் உள்ள குழந்தைகளுக்கான பள்ளி சார்பிலும் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அந்த இடத்தில் செல்போன் டவர் அமைக்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது. இந்நிலையில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நேற்று அப்பகுதியில் திரண்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பொது மக்கள் எதிர்ப்பை மீறி செல்போன் டவர் அமைக்கப்பட்டால் அதிகாரிகளை கண்டித்து போராட்டம் நடத்துவோம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து

adminApr 21, 2021 - 09:35:14 AM | Posted IP 162.1*****

actually we should ban mobiles for all the radiation

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam
Black Forest CakesThalir ProductsThoothukudi Business Directory