» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இரவு ஊரடங்கு: தென் மாவட்டங்களுக்கு பகல் நேரத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்க ஏற்பாடு

திங்கள் 19, ஏப்ரல் 2021 11:24:35 AM (IST)

இரவு நேர ஊரடங்கு காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, நாகர்கோவில் உள்பட தென் மாவட்டங்களுக்கு பகல் நேரத்தில் கூடுதல் அரசுப் பேருந்துகளை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 

நாளை முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலுக்கு வரும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இரவு நேர ஊரடங்கின்போது தனியார் மற்றும் பொது போக்குவரத்து, ஆட்டோ, டாக்ஸிக்கு அனுமதியில்லை. வெளிமாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து சேவைக்கு இரவில் தடை, அவசர மருத்துவ தேவைகளுக்கு மட்டும் தனியார் போக்குவரத்துக்கு அனுமதி உள்ளிட்ட பல புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன.

இந்நிலையில் இரவு நேர ஊரடங்கு காரணமாக நாளை முதல் தென் மாவட்டங்களுக்கு பகல் நேரத்தில் கூடுதல் அரசுப் பேருந்துகளை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு நாளை முதல் பகல் நேரத்தில் இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை தேவைக்கு ஏற்ப அதிகரிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. 

இரவு 10 மணி முதல் 4 மணி வரை பேருந்துகளை இயக்க அனுமதியில்லாததால், கோயம்பேட்டில் இருந்து நாளை முதல் பகல் நேரங்களில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, நாகர்கோவில் உள்பட தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசுப் பேருந்து போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Thalir Products


Nalam Pasumaiyagam



Black Forest Cakes




Thoothukudi Business Directory