» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் இளம்பெண் தற்கொலை: கணவரிடம் போலீஸ் விசாரணை

சனி 10, ஏப்ரல் 2021 8:33:20 PM (IST)

தூத்துக்குடியில் இளம்பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அவரது கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:  தூத்துக்குடி தாளமுத்துநகர், சுனாமி காலனி, சாய் நகரைச் சேர்ந்தவர் அரவிந்த் குமார், மீனவர். இவரது மனைவி பவதாரினி (23).  இந்த தம்பதியருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். அரவிந்த் குமார் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுவிட்டு 3 நாட்களுக்கு ஒருமுறை வீடு திரும்புவாராம். இன்று காலை அவர் வீடு திரும்பியுள்ளார். அப்போது கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் அரவிந்த் குமார் அதே பகுதியில் உள்ள தனது அம்மா வீட்டிற்கு சென்று விட்டாராம். 

மாலை 6 மணியளவில் அவர் திரும்பி வந்தபோது, அவரது வீட்டில் படுக்கையறையின் கதவு பூட்டப்பட்டு இருந்தது. குழந்தை அழுது கொண்டிருந்தது. இதையடுத்து அவர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது அவரது மனைவி தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் கிடந்தார். இதுகுறித்து தாளமுத்துநகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஜெயந்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThalir Products

Black Forest CakesNalam Pasumaiyagam
Thoothukudi Business Directory