» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

முககவசம் அணியாதவர்களுக்கு ரூ.4.95லட்சம் அபராதம் : தூத்துக்குடி மாவட்ட எஸ்பி நடவடிக்கை !!

சனி 10, ஏப்ரல் 2021 5:03:06 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் முக கவசம் அணியாத  2461 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ஒரே நாளில் 4லட்சத்து 92ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு : தற்போது கரோனா வைரஸ் பரவல் இரண்டாம் கட்டமாக அதிவேகமாக பரவி வருவதால் தூத்துக்குடி மாவட்டத்தில் முக கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருபவர்களுக்கு ரூபாய் 200 அபராதமும், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்களுக்கு ரூபாய் 500 அபராதமும் விதிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று (09.04.2021) ஒரே நாளில் தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் பொது இடங்களில் முககவசம் அணியாத 572 பேர் மீதும், தூத்துக்குடி ஊரக உட்கோட்டத்தில் 212 பேர் மீதும், திருச்செந்தூர் உட்கோட்டத்தில் 258 பேர் மீதும், ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டத்தில் 200 பேர் மீதும், மணியாச்சி உட்கோட்டத்தில் 261 பேர் மீதும், கோவில்பட்டி உட்கோட்டத்தில் 401 பேர் மீதும், விளாத்திகுளம் உட்கோட்டத்தில் 387 பேர் மீதும் மற்றும் சாத்தான்குளம் உட்கோட்டத்தில் 170 பேர் மீதும் என மொத்தம் 2461 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூபாய் 4,92,200 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று (09.04.2021) ஒரே நாளில் தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத 14 பேர் மீதும், தூத்துக்குடி ஊரக உட்கோட்டத்தில் ஒருவர் மீதும், திருச்செந்தூர் உட்கோட்டத்தில் 5 பேர் மீதும், ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டத்தில் 10 பேர் மீதும், மணியாச்சி உட்கோட்டத்தில் 3 பேர் மீதும், கோவில்பட்டி உட்கோட்டத்தில் 10 பேர் மீதும், விளாத்திகுளம் உட்கோட்டத்தில் 6 பேர் மீதும், சாத்தான்குளம் உட்கோட்டத்தில் 3 பேர் மீதும் என மொத்தம் 52 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூபாய் 26,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் தாக்கம் மீண்டும் வேகமாக பரவி வருவதால், அதன் தாக்கத்திலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. எந்தெந்த வழிகளிலெல்லாம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடியுமோ, அத்தனை வழிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் எத்தனையோ விழிப்புணர்வு கொடுத்தாலும் சிலர், அதனை கவனத்தில் கொள்ளாமல் தொடர்ந்து முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் செயல்பட்டு வருகின்றனர். 

இவ்வாறு செயல்படுவதால் இதன் தாக்கம் மேலும், மேலும் அதிகரித்துக்கொண்டேதான் செல்வதற்கான வாய்ப்பு உள்ளது என்றும், பொதுமக்கள் தமிழக அரசு விதித்துள்ள நெறிமுறைகளை கடைபிடித்து, முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்து நம்மையும், நம் சமூகத்தையும் பாதுகாத்து மேற்கண்டவாறு அபராதம் செலுத்துவதையும் தவிர்க்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . எஸ். ஜெயக்குமார் அவர்கள் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam

Black Forest Cakes


Thalir ProductsThoothukudi Business Directory