» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணிகளை முதன்மை செயலர் ஆய்வு

சனி 10, ஏப்ரல் 2021 3:21:08 PM (IST)தூத்துக்குடியில் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணிகளை முதன்மை செயலர்  குமார்ஜெயந்த் ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் மாநகராட்சிக்குட்பட்ட கணேஷ்நகர், முள்ளக்கபாடு ஆகிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைபெறுவதை அரசு முதன்மை செயலாளர் மற்றும் ஆணையர் கருவூலம் மற்றும் கணக்குத்துறைகள் குமார்ஜெயந்த்,  இன்று (10.04.2021) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர்  கி.செந்தில்ராஜ், மாநகராட்சி ஆணையர் ஷரண்யாஅறி, சார் ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன், ஆகியோர் உடன் இருந்தனர்.

பின்னர் அரசு முதன்மை செயலாளர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. 45 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். நமது மாவட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் 7 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சில தனியார் மருத்துவமனைகளிலும் கரோனா தடுப்பூசி போடப்படுகிறது. கரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 

நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, திருமண நிகழ்வுகளில் 100 நபர்களுக்கு மிகாமலும், இறுதி ஊர்வலங்களில் 50 நபர்களுக்கு மிகாமலும் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் உள்ள மொத்த இருக்கைகளில், 50 சதவீத இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது. கேளிக்கை விடுதிகள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இயக்கப்படும் அரசு பொது மற்றும் தனியார் பேருந்துகள், நகரப் பேருந்துகளில் உள்ள இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது பேருந்துகளில் நின்று கொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை.

தூத்துக்குடி மாவட்டத்தில் தினமும் கரோனா தொற்று அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்தார். தொடர்ந்து அரசு முதன்மை செயலாளர் மற்றும் ஆணையர் கருவூலம் மற்றும் கணக்குத்துறைகள் குமார்ஜெயந்த்,  கரோனா நோயாளிகள் சிகிச்சை மையம் அமைக்கப்படவுள்ள தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர்  ரேவதி, தூத்துக்குடி சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர்  போஸ்கோராஜ், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர்  குமரன், மாநகர நகர்நல அலுவலர்  வித்யா மற்றும் மருத்துவர்கள், அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து

tamilanApr 10, 2021 - 06:43:51 PM | Posted IP 108.1*****

தூத்துக்குடியில் உள்ள அனைத்து பூங்காக்களை உடனடியாக மூடுவது மிகவும் நல்லது .

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam


Black Forest Cakes

Thalir Products


Thoothukudi Business Directory