» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பள்ளி மாணவி உட்பட 2 இளம்பெண்கள் திடீர் மாயம்!

சனி 10, ஏப்ரல் 2021 11:33:12 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் வெவ்வேறு பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் இருவர் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார். 

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை வேலாயுதபுரம் மேற்கு தெருவைச் சேர்ந்தவர் நரசிம்மன். இவரது மகள் பிரியதர்ஷினி (21), அங்குள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 7ம் தேதி முதல் இவரை காணவில்லை. அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடிப்பார்த்தும் தகவல் தெரியவில்லை. இதுகுறித்து நரசிம்மன், கழுகுமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 

பள்ளி மாணவி மாயம்

எப்போதும்வென்றான் அருகேயுள்ள கீழ செய்தலை கிராமம், மேற்கு தெருவைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மகள் தாரணி (17), பிளஸ் 2 மாணவி. இவர் அடிக்கடி டிவி பாத்துக் கொண்டிருப்பாராம். இதனை தாயார் கண்டித்துள்ளார். இதனால் கோபத்தில் கடந்த 8ம் தேதி வீட்டைவிட்டு சென்றுவிட்டாராம். அவர் எங்கு சென்றார் என்ற விபரம் தெரியவில்லை. இதுகுறித்து அவரது தந்தை எப்போதும் வென்றான் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Nalam Pasumaiyagam

Black Forest Cakes

Thalir Products






Thoothukudi Business Directory