» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருமணமான 8 மாதங்களில் இளம்பெண் தற்கொலை : தூத்துக்குடி அருகே பரிதாபம்

சனி 10, ஏப்ரல் 2021 11:20:50 AM (IST)

தூத்துக்குடி அருகே திருமணமான 8 மாதங்களில் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்தது தொடர்பாக கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார். 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி அருகேயுள்ள சாயர்புரம், புளியநகர் அம்மன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்வ கர்ணன். இவரது மனைவி உச்சினி மாகாளி (23). இந்த தம்பதியருக்கு கடந்த 14.08.2020ல் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் தம்பதியர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

இதனால் மனவேதனையில் உச்சினி மாகாளி தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செ்யது கொண்டார். இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி வெங்கடேஷன் வழக்குப்ப திவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் திருமணமான 8 மாதங்களில் இளம்பெண் தற்கொலை செ்யதுள்ளதால், சம்பவம் குறித்து திருச்செந்தூர் கோட்டாட்சியர் மேல் விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thalir Products

Nalam Pasumaiyagam

Black Forest Cakes
Thoothukudi Business Directory