» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் லாரி திருட்டு: மர்ம நபர்கள் கைவரிசை

சனி 10, ஏப்ரல் 2021 11:15:58 AM (IST)

தூத்துக்குடியில் சாலையோரத்தில் நிறுத்தியிருந்த லாரியை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள கருங்குளம், காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் சுப்பையா மகன் செல்வகுமார் (46). இவர், சொந்தமாக லாரி வைத்து தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு லாரியை, தூத்துக்குடி மடத்தூர் சோரீஸ்புரம் ரோட்டில் நிறுத்திவிட்டு ஊருக்குச் சென்றுள்ளார். 

நேற்று காலை வந்து பார்த்தபோது லாரியை காணவில்லை. யாரோ மர்ம ஆசாமிகள் திருடிச் சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ.5லட்சத்து 40ஆயிரம் ஆகும். இதுகுறித்து சிப்காட் காவல் நிலையத்தில் செல்வகுமார் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில், சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam




Black Forest Cakes

Thalir Products




Thoothukudi Business Directory