» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஏப்.15 முதல் விசைப்படகுகள் கடலுக்குச் செல்ல தடை : தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

வெள்ளி 9, ஏப்ரல் 2021 3:23:03 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் ஏப்ரல் 15 முதல் ஜுன் 14 தேதி வரை 61 நாட்கள் கடலுக்கு மீன்பிடிக்க, செல்லக்கூடாது  என மாவட்ட ஆட்சியர்  செந்தில்ராஜ் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-ன் கீழ் தமிழகத்தின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் மீன் இனப்பெருக்கக் காலத்தை கருத்தில் கொண்டும் மீன்வளத்தை பாதுகாக்கும் பொருட்டும், திருவள்ளுர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி மாவட்டம் வரை ஒவ்வொரு ஆண்டும் 61 நாட்கள், அதாவது ஏப்ரல் 15 முதல் ஜுன் 14 தேதி வரை உள்ள கால அளவில் மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் கொண்டு கடலில் மீன்பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு அரசாணை வழங்கப்பட்டுள்ளது.

எனவே, அரசாணையின்படி இந்த ஆண்டு 2021 ஏப்ரல் 15 முதல் ஜுன் 14 தேதி வரை 61 நாட்கள் தூத்துக்குடி மாவட்ட மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க, செல்லக்கூடாது என மாவட்ட ஆட்சியர்  கி.செந்தில்ராஜ்,  தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam

Black Forest Cakes

Thalir ProductsThoothukudi Business Directory