» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தயார் : 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்பு

திங்கள் 5, ஏப்ரல் 2021 3:37:47 PM (IST)தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது. நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்குகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தல் வாக்குப் பதிவுக்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன.  தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு துவங்குகிறது.  தூத்துக்குடி மாவட்டத்தில் 6 தொகுதிகளிலும் 7,24,484 ஆண்கள், 7,57,151 பெண்கள், 164 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 14,81,799 வாக்காளர்கள் உள்ளனர். மாவட்டத்தில் 6 தொகுதிகளிலும் சேர்த்து 7,24,484 ஆண்கள், 7,57,151 பெண்கள், 164 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 14,81,799 வாக்காளர்கள் உள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி 29 மண்டலங்களாகவும், தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி 26 மண்டலங்களாகவும், திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி 25 மண்டலங்களாகவும்,, ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி 21 மண்டலங்களாகவும்,, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி 29 மண்டலங்களாகவும்,, கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி 28 மண்டலங்களாகவும் மொத்தம் 158 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு காவல் பாதுகாப்புடன் இன்று அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கண்காணிப்பில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகிறது. 

ஒவ்வொரு மண்டலத்திற்கும் மத்திய மாநில காவல் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்குபதிவிற்கு தேவையான படிவங்கள், பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. சுகாதாரத்துறை மூலம் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கான சாணிடைசர், கையுறைகள், பிபி கிட் உள்ளிட்டவைகளும் தனி வாகனத்தில் அனுப்பி வைக்கப்படுகிறது.

ஆட்சியர் ஆய்வு

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 26 மண்டலங்களுக்கு தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்குபதிவிற்கு தேவையான படிவங்கள், பொருட்கள் அனுப்பி வைக்கும் பணிகள் மற்றும் கொரேனா பாதுகாப்பு நடவடிக்கை பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். வாக்குசாவடிகளுக்கு கொண்டு செல்லக்கூடிய தேவையான படிவங்கள் அனைத்தும் சரியாக வைக்கப்பட்டுள்ளதா என்பதையும் ஆய்வு செய்தார். வாக்குப்பதிவு இயந்திரங்களை அந்தந்த மண்டல பொறுப்பாளர்களிடம் ஒப்படைத்து வாக்குசாவடிகளுக்கு கொண்டு செல்லும் பணிகளை விரைவுப்படுத்துமாறு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 29 மண்டலங்களுக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குசாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எட்டயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து மண்டல வாரியாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பப்படுவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து எட்டயபுரம் சிகேடி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அலுவலர்களுக்கு வாக்குசாவடி பணி உத்தரவு வழங்கும் பணிகளையும் ஆய்வு செய்தார்.

அதனைத்தொடர்ந்து ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 29 மண்டலங்களுக்கு ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுவதையும், புதியம்புத்தூர் ஜான் பாப்திஸ்ட் மேல்நிலைப்பள்ளியில் அலுவலர்களுக்கு வாக்குசாவடி பணி உத்தரவு வழங்கும் பணிகளையும் ஆய்வு செய்தார். மேலும் வாக்குசாவடி அலுவலர்களிடம் எவ்வித தயக்கமும் இன்றி தேர்தல் ஆணைய உத்தரவுகளை முழுமையாக பின்பற்றி சட்டமன்ற தேர்தல் சிறப்பாக நடைபெற பணியாற்றிட வேண்டும் என தெரிவித்தார்.

ஆய்வுகளின்போது தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் கலோன், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட வழங்கல் அலுவலர் அபுல்காசிம், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பரிமளா, வட்டாட்சியர்கள் ஜஷ்டின் (தூத்துக்குடி), அய்யப்பன் (எட்டயபுரம்), மணிகண்டன் (ஓட்டப்பிடாரம்) மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகள் 

வாக்குப்பதிவு நடைபெறும் வாக்குச்சாவடி மையங்களுக்கு 200 மீட்டர் சுற்றளவு எல்லைக்குள் அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் யாரும் தற்காலிக பூத்கள் அமைப்பதோ, கூட்டம் கூடுவதோ, ஓட்டு கேட்பதோ போன்ற எவ்வித நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது. வாக்காளர்களை வாக்குச்சாவடி மையங்களுக்கு அரசியல் கட்சியினரோ, வேட்பாளர்களோ வாகனங்களில் ஏற்றி செல்லக்கூடாது. மீறினால் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் பதற்றம் நிறைந்த பகுதிகளில் சுமார் 700-க்கும் மேற்பட்ட துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். இதுதவிர 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்ளூர் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam PasumaiyagamBlack Forest Cakes


Thalir Products
Thoothukudi Business Directory