» செய்திகள் - விளையாட்டு » உலகம்
பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுடன் துணை நிற்போம்: அமெரிக்கா உறுதி
சனி 7, ஜூன் 2025 12:41:14 PM (IST)

பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுடன் துணை நிற்போம் என்று இந்திய குழுவிடம் அமெரிக்கா உறுதி அளித்துள்ளது.
பயங்கரவாதத்துக்கு எதிரான நிலைப்பாட்டைத் தெரிவிக்க அமெரிக்காவுக்கு காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தலைமையிலான குழு சென்றுள்ளது. அமெரிக்காவின் நாடாளுமன்ற குழுவிடம் இந்தியாவின் நிலைப்பாட்டைத் தெரிவித்தபின், அமெரிக்க வெளியுறவு துணைச் செயலாளர், பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுடன் அமெரிக்காவும் உறுதியாக நிற்கிறது.
எல்லைதாண்டிய பயங்கரவாதம், எந்த வடிவில் இருந்தாலும், அதனை எதிர்க்க வேண்டும் என்று தனது உறுதியான நிலைப்பாட்டை இந்தியா எடுத்துரைத்தது. இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக உறவும் வலுப்படுத்துவது குறித்தும் விவாதித்தோம் என்று தெரிவித்தார்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்களை, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் அழித்தது. மேலும், பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாடு குறித்து தெரிவிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள நாடுகள் மற்றும் நட்பு நாடுகளுக்கும் எம்.பி.க்கள் அடங்கிய குழுக்கள் சுற்றுப்பயணம் சென்றுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஈரானைத் தாக்கினால் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை!
வெள்ளி 20, ஜூன் 2025 3:39:08 PM (IST)

அமெரிக்காவில் 3-வது முறையாக டிக் டாக் செயலி இயக்க அவகாசம் நீட்டிப்பு: டிரம்ப் உத்தரவு!
வெள்ளி 20, ஜூன் 2025 11:23:50 AM (IST)

மோடிக்கு சமஸ்கிருத இலக்கண புத்தகத்தை பரிசளித்த குரோஷியா பிரதமர்!
வியாழன் 19, ஜூன் 2025 5:49:59 PM (IST)

ஈரான் - இஸ்ரேல் இடையே மத்தியஸ்தம் செய்ய தயார்: ரஷிய அதிபர் புதின் அறிவிப்பு
வியாழன் 19, ஜூன் 2025 11:07:55 AM (IST)

அமெரிக்காவின் தலையீடு ஈடுசெய்ய முடியாத சேதத்தை ஏற்படுத்தும்: காமெனி எச்சரிக்கை!
புதன் 18, ஜூன் 2025 4:44:06 PM (IST)

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: விஞ்ஞானிகள், ராணுவ தளபதிகள் உள்பட 585 பேர் பலி!
புதன் 18, ஜூன் 2025 10:41:37 AM (IST)
