» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பிரான்சில் புதிய இந்திய தூதரகம் : பிரதமர் மோடி திறந்து வைத்தார்!

புதன் 12, பிப்ரவரி 2025 4:45:22 PM (IST)



பிரான்சில் புதிதாக கட்டப்பட்டுள்ள இந்திய தூதரகத்தை பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் இணைந்து பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

அரசு முறை பயணமாக பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு சென்றுள்ளார். பாரிசில் நேற்று தொடங்கிய சர்வதேச செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாடு பிரதமர் மோடி கலந்துகொண்டார். பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்பட பல்வேறு நாட்டு தலைவர்கள் பங்கேற்ற இம்மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். இதனை தொடர்ந்து, பிரான்சின் மெர்சிலி நகருக்கு அதிபர் மேக்ரானுடன் பிரதமர் மோடி சென்றார். 

அங்கு புதிதாக கட்டப்பட்டுள்ள இந்திய தூதரகத்தை பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் இணைந்து  பிரதமர் மோடி திறந்து வைத்தார். முன்னதாக, மெர்சிலி நகரில் உள்ள கல்லறை தோட்டத்திற்கு சென்ற பிரதமர் மோடி, உலகப்போரில் உயிரிழந்த இந்திய வீரர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். இதனை தொடர்ந்து இரு தலைவர்களும், மெர்சிலி நகரில் வசித்துவரும் இந்திய வம்சாவளியினரிடம் கலந்துரையாடினர். பிரான்ஸ் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி அமெரிக்கா செல்கிறார். அவர் அமெரிக்க அதிபர்  டிரம்ப்பை சந்திக்க உள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital




CSC Computer Education





Thoothukudi Business Directory