» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவுக்கான நேரம் 3 நிமிடங்களாக அதிகரிப்பு!

திங்கள் 20, ஜனவரி 2025 11:42:41 AM (IST)

சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவுக்கான நேரம் மூன்று நிமிடங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மெட்டா நிறுவனத்தின் போட்டோ மற்றும் வீடியோ ஷேரிங் சமூக வலைதளம்தான் இன்ஸ்டாகிராம். கடந்த 2010-ல் தொடங்கப்பட்டது. அடுத்த சில ஆண்டுகளில் மெட்டா (அப்போது ஃபேஸ்புக்) அதனை வாங்கியது. இன்று உலக அளவில் மாதந்தோறும் சுமார் 1 பில்லியன் ஆக்டிவ் பயனர்கள் இன்ஸ்டாகிராம் தளத்தை பயன்படுத்தி வருவதாக தெரிகிறது. இந்த தளத்தில் பயனர்களின் பயன்பாட்டு அனுபவத்துக்காக அவ்வப்போது புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்படுவது வழக்கம்.

அந்த வகையில் ரீல்ஸ்களுக்கான நேரம் மூன்று நிமிடங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், சதுர வடிவிலான ப்ரொபைல் கிரிட் இப்போது செவ்வக (ரெக்டேங்குலர்) வடிவ மாற்றம் மற்றும் நண்பர்களுக்கு லைக் செய்த ரீல்ஸ்களைக் ஷோ செய்வது போன்ற அம்சங்கள் தற்போதைய அப்டேட்களாக மெட்டா வழங்கியுள்ளது. இருப்பினும் ரீல்ஸ் நேரம் நீட்டிப்பை தவிர மற்ற இரண்டு அம்சங்கள் விரைவில் பயன்பாட்டுக்கு கிடைக்கும் எனத் தெரிகிறது. 

யூடியூப் ஷார்ட்ஸ் போலவே இன்ஸ்டா தளத்தில் ரீல்ஸ் நேரம் மூன்று நிமிடங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்பு இது வெறும் 90 நொடிகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதை இன்ஸ்டாகிராம் தலைவர் ஆடம் மொசேரி உறுதி செய்துள்ளார். அமெரிக்காவில் டிக்-டாக் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அதற்கு மாற்று முயற்சியாக இதை மெட்டா நிறுவனம் கையில் எடுத்துள்ளதாக டெக் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




New Shape Tailors



Arputham Hospital



Thoothukudi Business Directory