» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஈரானின் அணுசக்தி தளங்களை தாக்கி இருக்க வேண்டும் : இஸ்ரேலுக்கு ட்ரம்ப் யோசனை!!

சனி 5, அக்டோபர் 2024 3:56:03 PM (IST)

ஈரானில் உள்ள அனுசக்தி நிலையங்கள் மீது தான் இஸ்ரேல் முதலில் தாக்குதல் நடத்தி இருக்க வேண்டும் என்ற முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் கருத்தால் சர்ச்சை எழுந்துள்ளது. 

அமெரிக்க அதிபரான தேர்தலுக்கு சரியாக ஒரு மாதமே உள்ள நிலையில், குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். வடக்கு கரோலினா மாகாணத்தில் ஈடுபட்ட தேர்தல் பிரச்சாரத்தின் போது, செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், ஈரானின் அணு ஆற்றல் நிலைகளை தவிர்த்து பிற இடங்களில் தாக்குதல் நடத்தலாம் என்ற அதிபர் ஜோபிடன் கருத்தை விமர்சித்தார்.

தாக்குதல் என்று வந்துவிட்டால் அணுசக்தி நிலையங்களை தான் இஸ்ரேல் தாக்கி இருக்க வேண்டும் என்று ட்ரம்ப் கூறினார். அதாவது, "ஈரான் மீதான தாக்குதல் பற்றிய கேள்விக்கு, அணு ஆயுத நிலைகளை தாக்கக் கடாது என்று பைடன் பதில் அளித்தார். ஆனால், அவற்றைத்தான் முதலில் தாக்கி இருக்க வேண்டும். அணு ஆயுத நிலைகளைத்தாள் இலக்கு வைக்க வேண்டும். 

அணு ஆயுதங்களால், பேரழிவை ஏற்படுத்த முடியும் என்றபோது. அந்த அழிவு சக்திகளின் மீதுதான் தாக்குதல் நடத்த வேண்டும்.”இவ்வாறு தெரிவித்தார். அமெரிக்க அதிபராக இருந்த போது, அணு ஆயுதங்களை தாம் மறு கட்டமைத்ததாக கூறிய ட்ரம்ப், அணு ஆயுதங்களை உருவாக்கும் முடிவினை வெறுத்ததாகவும் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital

New Shape Tailors






Thoothukudi Business Directory