» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இங்கிலாந்தில் மன்னர் சார்லஸ் படத்துடன் ரூபாய் நோட்டுகள் வெளியீடு!!
வியாழன் 11, ஏப்ரல் 2024 11:55:28 AM (IST)

இங்கிலாந்தில் மன்னர் சார்லஸ் படத்துடன் புதிய ரூபாய் நோட்டுகள் (பவுண்டு) வெளியிடப்பட்டுள்ளது.
இங்கிலாந்து ராணி எலிசபெத் மறைந்த பிறகு மூன்றாம் சார்லஸ் இங்கிலாந்தின் மன்னராக பொறுப்பேற்றார். இதனிடையே மன்னர் சார்லசின் படத்துடன் இங்கிலாந்து பணமான பவுண்டு வெளியாகும் என இங்கிலாந்து வங்கி அறிவித்தது. இந்தநிலையில் மன்னர் சார்லஸ் படத்துடன் கூடிய இங்கிலாந்து நாட்டின் பவுண்டு தாள்கள் அச்சிடப்பட்டுள்ளன.
இங்கிலாந்து வங்கியின் கவர்னர் ஆண்ட்ரூ பெய்லி பக்கிங்காம் அரண்மனைக்கு நேரடியாக சென்று மன்னர் சார்லசிடம் அதனை காட்டி ஒப்புதலை பெற்றார். இங்கிலாந்து நாட்டு பணத்தின் தாள்களான 5,10,20 மற்றும் 50 பவுண்டுகளில் மன்னரின் படம் அச்சிடப்பட்டுள்ளன. வரும் ஜூன் மாதம் முதல் புழக்கத்திற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த ராணி எலிசபெத் படத்துடன் ஏற்கனவே புழக்கத்தில் உள்ள பண நோட்டுகளுக்கு பாதிப்பு இருக்காது எனவும் தெரிவித்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஈரான் - இஸ்ரேல் இடையே மத்தியஸ்தம் செய்ய தயார்: ரஷிய அதிபர் புதின் அறிவிப்பு
வியாழன் 19, ஜூன் 2025 11:07:55 AM (IST)

அமெரிக்காவின் தலையீடு ஈடுசெய்ய முடியாத சேதத்தை ஏற்படுத்தும்: காமெனி எச்சரிக்கை!
புதன் 18, ஜூன் 2025 4:44:06 PM (IST)

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: விஞ்ஞானிகள், ராணுவ தளபதிகள் உள்பட 585 பேர் பலி!
புதன் 18, ஜூன் 2025 10:41:37 AM (IST)

இங்கிலாந்து வரலாற்றில் முதல்முறை : உளவுப் பிரிவின் தலைவராக பெண் நியமனம்!
செவ்வாய் 17, ஜூன் 2025 11:40:46 AM (IST)

இஸ்ரேல் - ஈரான் போர் தீவிரம்: மகனின் திருமணத்தை ஒத்திவைத்த நெதன்யாகு!
திங்கள் 16, ஜூன் 2025 12:52:47 PM (IST)

இந்தியா - பாக். போல் இஸ்ரேல் - ஈரான் போரை நிறுத்த வேண்டும்: டிரம்ப் வலியுறுத்தல்
திங்கள் 16, ஜூன் 2025 11:20:16 AM (IST)
