» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ரஷ்யாவில் அணுமின் நிலையம் மீது உக்ரைன் தாக்குதல்: ஐ.நா., எச்சரிக்கை

திங்கள் 8, ஏப்ரல் 2024 3:54:53 PM (IST)ரஷ்யாவில் உள்ள அணுமின் நிலையம் மீது குறி வைத்து தாக்குதல் நடத்திய உக்ரைனுக்கு ஐ.நா., கண்டனம் தெரிவித்துள்ளது. 

ரஷ்யாவில் உள்ள ஜபோரிஜியா அணுமின் நிலையம் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது. ஐரோப்பாவின் இந்த மிகப் பெரிய அணுமின் நிலையம் துவக்கத்தில் உக்ரைன் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. ஆனால், கடந்த 2022ம் ஆண்டு போர் துவங்கிய போது, ரஷ்ய ராணுவம் இதனை கைப்பற்றியது. உக்ரைனால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இந்நிலையில் ரஷ்யா அணுமின் நிலையங்கள் மீது குறிவைத்து ட்ரோன் மூலம் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்பட்டன. ரஷ்யா சரியான நேரத்தில் பதிலடி கொடுத்ததால், பெரும் அசம்பாவிதம் தடுத்து நிறுத்தப்பட்டது. இல்லையெனில் அணு கதிர்வீச்சு ஏற்படும் நிலைமை உருவாகி இருக்கும். ஐ.நா., அதிகாரிகளும் இந்த தாக்குதலை கண்டித்துள்ளனர். ரஷ்யா உக்ரைன் இடையே கடந்த 2021ம் ஆண்டு பிப்., 24ம் தேதி முதல் போர் நடைபெற்று வருகிறது. இரண்டு ஆண்டுக்கும் மேலாக நீடித்து வரும் போரில் ஏராளமான பொதுமக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham HospitalThoothukudi Business Directory