» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ஸ்பெயினில் இரவு நேர கேளிக்கை விடுதியில் தீவிபத்து : 13 பேர் உயிரிழப்பு
திங்கள் 2, அக்டோபர் 2023 12:02:54 PM (IST)
ஸ்பெயின் நாட்டில் இரவு நேர கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் 13பேர் உயிரிழந்தனர்.
ஸ்பெயின் நாட்டின் தென்கிழக்கு நகரமான முர்சியாவில் இரவு நேர கேளிக்கை விடுதி ஒன்று செயல்படுகிறது. வார இறுதியை முன்னிட்டு இங்கு பலர் கூடியிருந்தனர். அப்போது அந்த விடுதியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ மளமளவென அருகில் இருந்த கட்டிடங்களுக்கும் வேகமாக பரவியது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.
இதுகுறித்த தகவலின்பேரில் அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க தண்ணீரை பீய்ச்சியடித்தனர். சில மணி நேர போராட்டத்துக்கு பின்னர் இந்த தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. எனினும் இந்த தீ விபத்தில் 13 பேர் பலியாகினர். படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.