» செய்திகள் - விளையாட்டு » உலகம்

மெக்சிகோவில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு: 10 கார் பந்தய வீரர்கள் பலி!

ஞாயிறு 21, மே 2023 9:59:04 PM (IST)



மெக்சிகோவில் கார் பந்தய வீரர்கள் மீது மர்ம நபர்கள் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 10 வீரர்கள் உயிரிழந்தனர்.

மெக்சிகோ நாட்டின் பஜா கலிபோர்னியா மாகாணம் என்செண்டா நகரில் உள்ள சென் வென்சிட்டி பகுதியில் நேற்று கார் பந்தயம் நடைபெற்றது. இதில் 50க்கு மேற்பட்ட கார் பந்தய வீரர்கள் பங்கேற்றனர். இப்போட்டியை காண நூற்றுக்கணக்கானோர் குவிந்திருந்தனர்.

இந்நிலையில், கார் பந்தயத்தின் போது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. வேனில் வந்த ஒரு கும்பல் கார் பந்தய வீரர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் கார் பந்தய வீரர்கள் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 9 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர். தப்பியோடிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து

ஆம்மே 22, 2023 - 09:50:18 PM | Posted IP 162.1*****

அங்கேயேயும் போதை , கஞ்சா திருட்டு அரசியல்வாதிகள் கும்பல் அதிகம்.

angayumமே 21, 2023 - 10:19:33 PM | Posted IP 172.7*****

thirttu parambarai irukku pola

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads











Thoothukudi Business Directory