» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஒபாமா உள்பட 500 அமெரிக்கள் ரஷியாவில் நுழையத் தடை- புதின் அரசு அதிரடி!

சனி 20, மே 2023 5:09:27 PM (IST)

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா உள்ளிட்ட 500 அமெரிக்கர்கள் ரஷியாவுக்குள் நுழையத் தடை விதித்துள்ளது ரஷியா.

உக்ரைனில் நடந்த போருக்கு அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உள்பட 500 அமெரிக்கர்கள் ரஷியாவுக்குள் நுழைய நேற்று (வெள்ளிக்கிழமை)  தடை விதித்துள்ளது ரஷியா. மேலும், ரஷியா மீதான விரோதமான ஒரு தாக்குதல் கூட தண்டிக்கப்படாமல் போகாது என்பதை வாஷிங்டன் நீண்ட காலத்திற்கு முன்பே கற்றுக்கொண்டிருக்க வேண்டும் என்று ரஷிய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.ம் அளித்துள்ளது. 

கடந்த மார்ச் மாதம் உளவு பார்த்ததாக சந்தேகத்தின் பேரில் அமெரிக்கா வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகையின் செய்தியாளர் இவான் கார்ஸ்கோவிச் சில ரகசியத் தகவல்களை இடைமறித்து சேகரிக்க முயன்ற குற்றத்துக்காக ரஷிய உளவுப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளதாகவும், உக்ரைன் போர் காரணமாக அமெரிக்கா, ரஷியா இடையே உறவுச் சிக்கல் வலுத்த நிலையில் இந்தக் கைது நடவடிக்கை நடந்துள்ளது.  இவான் கார்ஸ்கோவிச்விடம் ரஷிய வெளியுறவு அமைச்சகம் வழங்கிய பத்திரிகையாளர் அங்கீகார அடையாள அட்டை உள்ளது. இருப்பினும் அவரை உளவாளி என ரஷியா கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads











Thoothukudi Business Directory