» செய்திகள் - விளையாட்டு » உலகம்

காரில் சீட் பெல்ட் அணியாத பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கிற்கு அபராதம்!

சனி 21, ஜனவரி 2023 4:49:47 PM (IST)

காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்றதால் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கிற்கு 100 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், 100-க்கும் மேற்பட்ட புதிய திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்துவதற்காக காரில் பயணித்தபடி வீடியே மூலம் பேசினார். அந்த வீடியோவில் ரிஷி சுனக், காரில் 'சீட் பெல்ட்' அணியாமல் பயணித்தபடி பேசும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

இது வைரலாக பரவியதுடன், பிரதமரே சீட் பெல்ட் அணியாமல் காரில் சென்றதற்கு பலரும் விமர்சித்திருந்தனர். சீட் பெல்ட் அணியாமல் சென்றதற்காக ரிஷி சுனக் மன்னிப்பும் கோரினார். இதனிடையே, சீட் பெல்ட் அணியாமல் காரில் பயணித்ததற்காக ரிஷி சுனக்கிற்கு 100 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory