» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சுந்தர் பிச்சைக்கு பத்ம பூஷண் விருது: இந்திய தூதர் தரன்ஜித் சிங் சாந்து வழங்கினார்!

சனி 3, டிசம்பர் 2022 12:20:01 PM (IST)



பத்ம பூஷண் விருது வழங்கிய இந்திய அரசுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என சுந்தர் பிச்சை தெரிவித்தார்.

கூகுள், ஆல்ஃபபெட் இங்க் நிறுவனங்களின் சிஇஓ  சுந்தர் பிச்சைக்கு இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டிருந்தது. அந்த விருதை அவர் நேரில் பெற்றுக் கொள்ள இயலவில்லை. இதனால், விருதை அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சாந்து, சுந்தர் பிச்சையிடம் வழங்கினார்.

விருதைப் பெற்றுக் கொண்டு பேசிய சுந்தர் பிச்சை, "இந்திய அரசுக்கும், இந்திய மக்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு மிகப்பெரிய கவுரவத்தை சேர்த்துள்ளீர்கள். என்னை உருவாக்கிய தேசத்திடம் இருந்து எனக்கு இந்த விருது கிடைத்துள்ளது. இந்தியா எனது ஓர் அங்கம். நான் எங்கு சென்றாலும் அந்த அடையாளத்தை எடுத்துச் செல்கிறேன். 

என் குடும்பத்தினர் கற்றலுக்கும் ஞானத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்தனர். நான் எனது வாய்ப்புகளைத் தேடிப் பயணிக்க என் பெற்றோர் நிறைய தியாகம் செய்தனர். அப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்ததில் எனக்கு மகிழ்ச்சி" என்றார். இந்த விருது வழங்கும்போது சான் ஃப்ரான்சிஸ்கோ தூதரகத்தின் அதிகாரி டிவி நாகேந்திர பிரசாத் இருந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital








Thoothukudi Business Directory