» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்தோனேஷியா கால்பந்து மைதானத்தில் வன்முறை: நெரிசலில் சிக்கி 174 பேர் பலி

ஞாயிறு 2, அக்டோபர் 2022 8:54:27 PM (IST)



இந்தோனேஷியா கால்பந்து மைதானத்தில் ஏற்பட்ட வன்முறையில் பலர் நெரிசலில் சிக்கியும், போலீசார் கண்ணீர் புகை வீச்சில் பலர் மூச்சுத்திணறி 174 பேர் உயிரிழந்தனர். 

இந்தோனேஷியா கிழக்கு ஜாவா பகுதியில் இரு அணியினர் நடந்த கால்பந்து போட்டி நிறைவு பெற்றதும் வெற்றி, தோல்வி அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து தோல்வியுற்ற அணியின் ஆதரவாளர்கள் மைதானத்திற்குள் ஓடினர். இதனால் பதட்டம் ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் துப்பாக்கிச்சூடு, கண்ணீர் புகை வீசினர். இதில் பலரும் நாலாபுறமும் சிதறி ஓடினர். பலர் நெரிசலில் மிதிபட்டு இறந்தனர். பலர் கண்ணீர் புகைவீச்சில் மூச்சு திணறினர். இதில் 174 பேர் பலியாகினர்.

காயமுற்ற 150 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் . மேலும் பலர் ஆபத்தான நிலையில் இருப்பதால் உயிர்ப்பலி அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த துயர சம்பவத்தால் இந்நாட்டில் பரபரப்பும், பதட்டமும் நிலவுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory