» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஈரானில் பெண்கள் மீதான வன்முறை அதிகரிப்பு: ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டத்தில் 50 பேர் பலி!

சனி 24, செப்டம்பர் 2022 4:58:58 PM (IST)ஈரானில் கட்டாய ஹிஜாபுக்கு எதிராக நடக்கும் போராட்டத்தில் இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து ஊடகங்கள், " ஈரானில் கடந்த 8 நாட்களாக ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. ஈரானில் 80 நகரங்களில் கட்டாய ஹிஜாப்புக்கு எதிராக போராட்டம் இரவு பகலாக தொடர்கிறது. போராட்டத்தில் இளம் பெண்கள், இளைஞர்கள் என அனைவரும் பங்கேற்றுள்ளனர். இதுவரை இப்போராட்டத்தில் 50 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பாதுகாப்புப் பணியில் உள்ளவர்களும் அடக்கம்.போராட்டத்தை கட்டுப்படுத்த ஈரானில் இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளன

போராட்டத்தில் 22 வயதான, ஹனானேன் கியான், என்ற பெண்மணி போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும் பல்வேறு இடங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் அதிகரித்தி வருகின்றன.” என்று செய்திகள் வெளியிட்டுள்ளன. இந்த நிலையில் ஈரானில் ஹிஜாப் ஆதரவு போராட்டங்களும் தொடர்ந்து வருகின்றன. ஆயிரக்கணக்கான பெண்களும், ஆண்களும் கருப்பு உடை அணிந்து தெஹ்ரான் வீதிகளில் போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Thoothukudi Business Directory