» செய்திகள் - விளையாட்டு » உலகம்

மன்னராட்சி முறைக்கு எதிர்ப்பு: ஆஸ்திரேலியாவில் ஆயிரக்கணக்கானோர் பேரணி

வெள்ளி 23, செப்டம்பர் 2022 11:36:57 AM (IST)



மன்னராட்சி முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. 

பிரிட்டன் ராணி எலிசபெத் கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி காலமானார். அவரது மறைவுக்கு உலகின் பல்வேறு நாடுகளும் இரங்கல் தெரிவித்து வருகின்றன. ஆஸ்திரேலியாவிலும் பிரிட்டன் ராணி மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மேலும் ஒருநாள் அரசு துக்கம் அனுசரிக்கப்பட்டது. 

இந்நிலையில் உலகின் பல்வேறு நாடுகளை தங்களது காலணி நாடுகளாக பயன்படுத்தி வந்த பிரிட்டன் நாட்டின் ராணி மறைவிற்கு அரசு துக்கம் அனுசரித்ததற்கு ஆஸ்திரேலிய மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் மன்னராட்சி முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிட்னியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. 

ஆஸ்திரேலியாவின் 4 முக்கிய நகரங்களில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் நவீன காலத்தில் மன்னராட்சி முறை தொடர்வது அவமானகரமானது எனத் தெரிவித்த போராட்டக்காரர்கள் இந்த நடைமுறை மாற்றப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.


மக்கள் கருத்து

jhefbejfbejrhbSep 23, 2022 - 08:33:52 PM | Posted IP 172.7*****

never remove mannar aatchi

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital



Thoothukudi Business Directory