» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இளம்பெண் மரணம் எதிரொலி; ஹிஜாபுக்கு எதிராக பெண்களின் போராட்டம் தீவிரம்: ஈரானில் பதற்றம்

வியாழன் 22, செப்டம்பர் 2022 10:43:09 AM (IST)ஈரானில் ஹிஜாப் அணியாததால் இளம் பெண் ஒருவர் காவலர்களால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து அந்நாட்டில் ஹிஜாபுக்கு எதிராக பெண்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

ஈரானின் வட-மேற்கு நகரான சாகேஸ் பகுதியில், 22 வயது குர்தீஷ் இன பெண் அமினி என்பவர் தெஹ்ரானில், ஹிஜாப் அணியாமல் தனது சகோதரருடன் சென்ற இவர், கலாசார காவலர்களால் கைது செய்யப்பட்டு, காவலில் வைக்கப்பட்டிருந்தபோது, காவலர்களால் கொடூரமாகத் தாக்குதலுக்கு உள்ளாகி பலியானதாக செய்திகள் வெளியானது.

அவர்  மாரடைப்பால் மரணமடைந்ததாக காவல்துறை கூறும் நிலையில், காவலர்கள் தாக்கியதாலேயே அவர் மரணமடைந்ததாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, ஈரானின் பல்வேறு பகுதிகளில் ஹிஜாபுக்கு எதிராக பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

நேற்று ஐந்தாவது நாளாக ஈரானில் நடைபெற்ற போராட்டத்தின் போல பல பெண்கள் தங்களது ஹிஜாபைக் கழற்றி எறிந்தனர். சிலர் ஹிஜாபை தீ வைத்துக் கொளுத்தினர். மேலும் போராட்டத்தில், பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இதுவரை ஒரு பெண் உள்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory