» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பாகிஸ்தானில் டேங்கர் லாரி - பேருந்து மோதி விபத்து: 20 பயணிகள் உடல் கருகி உயிரிழப்பு!

செவ்வாய் 16, ஆகஸ்ட் 2022 3:57:11 PM (IST)பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் எண்ணெய் டேங்கர் லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் 20 பயணிகள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

பாகிஸ்தானின் லாகூரில் இருந்து கராச்சிக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்த பேருந்து அதிவேகமாக வந்த எண்ணெய் டேங்கர் லாரியில் மோதியதில் இரண்டு வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தன. அதில், 20 பயணிகள் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். இந்த கோர விபத்தில், தீக்காயங்களுக்கு ஆளான 6  பயணிகள் முல்தானில் உள்ள நிஷ்தார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

அவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் கூறினர். விபத்தில் பலியான பெரும்பாலான பயணிகளின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு முற்றிலும் எரிந்துள்ளதாகவும், இந்த உடல்கள் டிஎன்ஏ பரிசோதனைக்கு பின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து காரணமாக நெடுஞ்சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது. தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham HospitalThoothukudi Business Directory