» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படை தாக்குதல்: அல் கொய்தாவின் முக்கிய தலைவர் கொல்லப்பட்டார்
செவ்வாய் 2, ஆகஸ்ட் 2022 12:39:42 PM (IST)
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படை நடத்திய தாக்குதலில் அல்-கொய்தாவின் முக்கிய தலைவர் அய்மன் அல்-ஜவாஹ்ரி கொல்லப்பட்டார்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மற்றும் அல்-கொய்தா போன்ற பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. அந்த பயங்கரவாத அமைப்புகளை ஒடுக்கும் நோக்கில் அமெரிக்க படைகள் தரைவழி மற்றும் வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படை நடத்திய தாக்குதலில் அங்கு பதுங்கி இருந்த அல்-கொய்தா இயக்கத்தின் முக்கிய தலைவரான அய்மான்அல்-ஜவாஹ்ரி கொல்லப்பட்டார்.
அல்-கொய்தா இயக்க தலைவரான ஒசாமா பின்லேடனோடு நெருங்கிய தொடர்பு வைத்திருந்தவர் அல்-ஜவாஹ்ரி என்பதும், அதிமுக்கிய பயங்கரவாதிகள் பட்டியலில் இணைத்திருந்த அமெரிக்க அரசு கடந்த 2011-ம் ஆண்டிலிருந்து அவனை தேடி வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. அல்-கொய்தா இயக்கத்தின் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டதை அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் இன்று அறிவித்தார்.