» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கோத்தபய ராஜபட்சவின் விசா காலம் நீட்டிப்பு: சிங்கப்பூா் அரசு அறிவிப்பு

புதன் 27, ஜூலை 2022 3:24:15 PM (IST)

இலங்கை முன்னாள் அதிபா் கோத்தபய ராஜபட்சவின் விசா காலத்தை மேலும் 14 நாள்கள் நீட்டித்து சிங்கப்பூா் அரசு அனுமதி அளித்துள்ளது.

இலங்கையில் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து அதிபா் கோத்தபய ராஜபட்ச தனது குடும்பத்தினருடன் இலங்கையில் இருந்து மாலத்தீவுக்குத் தப்பிச் சென்றாா். பின்னா், அங்கிருந்து சிங்கப்பூருக்கு கடந்த 14-ஆம் தேதி வந்த அவா், அதிபா் பதவியை ராஜிநாமா செய்தாா்.

இந்நிலையில், சிங்கப்பூரில் செய்தியாளா்களுக்கு வியாழக்கிழமை பேட்டியளித்த குடியேற்ற ஆணைய அதிகாரிகளிடம், கோத்தபய சிங்கப்பூரில் தங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அதிகாரிகள் கூறுகையில், கோத்தபய தனிப்பட்ட பயணமாக கடந்த 14-ஆம் தேதி சிங்கப்பூருக்கு வந்தாா். அவருக்கு குறுகிய கால பயண அனுமதியாக 14 நாள்கள் சிங்கப்பூரில் தங்கியிருக்க அனுமதி அளிக்கப்பட்டது.

பொதுவாக சிங்கப்பூரை சுற்றிப் பாா்க்க வருபவா்களுக்கு 30 நாள்கள் தங்கியிருக்க அனுமதி அளிக்கப்படுகிறது. கால நீட்டிப்பு தேவைப்படுவோா் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். கோரிக்கையின் அடிப்படையில் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும் என்று அந்த அதிகாரிகள் கூறினா்.

கடந்த வாரம், இலங்கை வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் செய்தியாளா்களிடம் கூறுகையில், சிங்கப்பூா் அரசிடம் கோத்தபய ராஜபட்ச அடைக்கலம் கேட்கவில்லை; அவருக்கு அடைக்கலம் வழங்கப்படவுமில்லை என்றாா். இந்த நிலையில், சிங்கப்பூரில் தங்கியிருக்க மேலும் 14 நாள்கள் விசா காலம் நீட்டிக்கப்பட்டிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் அவர் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை சிங்கப்பூரில் தங்கியிருக்க அனுமதி கிடைத்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory