» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்க வரலாற்றில் முதல்முறை: உச்சநீதிமன்ற நீதிபதியாக கறுப்பின பெண் பதவியேற்பு!

வெள்ளி 1, ஜூலை 2022 5:01:28 PM (IST)

அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக கறுப்பினப் பெண்மணி ஒருவர் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டார். 

அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி ஸ்ரீபன் பிரெயர் ஓய்வுபெறுவதாக கடந்த ஜனவரியில் அறிவித்தார். இதனையடுத்து காலியாகும் இடத்துக்கு கருப்பின பெண்ணை நீதிபதியாக நியமிக்க அதிபர் ஜோ பைடன் உறுதி பூண்டிருந்தார். அதன்படி, நீதிபதி கேடான்ஜி பிரவுன் ஜாக்சனை அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியாக கடந்த பிப்ரவரி 25ம் தேதி அதிபர் ஜோ பைடன் தேர்வு செய்தார். அமெரிக்க செனட் சபை அங்கீகாரத்திற்காக கடந்த ஏப்ரல் மாதம் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் நீதிபதி ஜாக்சனை ஆதரித்து 53 வாக்குகளும் எதிர்த்து 47 வாக்குகளும் கிடைத்தது.

தொடர்ந்து, கறுப்பினத்தை சேர்ந்த கேடான்ஜி பிரவுன் ஜாக்சனை நியமிக்க அந்நாட்டு நாடாளுமன்ற மேலவை ஒப்புதல் அளித்தது. இந்த நிலையில்,  51 வயதான கேடான்ஜி பிரவுன் ஜாக்சனை நேற்று பதவியேற்றுக் கொண்டார். இதன்மூலம் அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் முதல் கருப்பின பெண் நீதிபதி என்ற பெருமையை இவர் பெறுகிறார். இவருக்கு முன்பாக இரு கருப்பின ஆண்கள் மட்டுமே உச்சநீதிமன்ற நீதிபதிகளாக இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வாஷிங்டனில் உள்ள கொலம்பியா மாவட்ட மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக இருந்த கேடான்ஜி பிரவுன் ஜாக்சன், அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் 6வது பெண் நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டார். உச்சநீதிமன்றத்தின் 233 ஆண்டுகால வரலாற்றில் இதுவரை 5 பெண் நீதிபதிகள் மட்டுமே நியமிக்கப்பட்டு உள்ளனர் என்பது நினைவு குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் அரசியலமைப்பை ஆதரிப்பதற்கும் பாதுகாப்பதற்கும், பயம் அல்லது தயவு இல்லாமல் நீதியை வழங்குவதற்கும் முழு மனதுடன் நான் பொறுப்பேற்கிறேன்' என்று ஜாக்சன் உறுதியளித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham HospitalThoothukudi Business Directory