» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பெண்கள், சிறுமிகள் பாலியல் பலாத்காரம்: பாப் பாடகர் கெல்லிக்கு 30 ஆண்டு சிறை!

வியாழன் 30, ஜூன் 2022 12:07:33 PM (IST)

அமெரிக்காவில் பெண்கள், சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் பிரபல பாப் பாடகர் கெல்லிக்கு 30 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்காவில் வசித்து வருபவர் இசை நட்சத்திரம் கெல்லி என்று அழைக்கப்படுகிற ராபர்ட் கெல்லி ஆவார். இவர் 'ஆர் அண்ட் பி' என்று அழைக்கப்படுகிற 'ரிதம் அண்ட் புளூஸ்' இசையில் பிரபலமானவர். இவர் மீது ஏராளமான செக்ஸ் புகார்கள் குவிந்தன. பெண்களையும், சிறுமிகளையும் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார் என்பதுதான் குற்றச்சாட்டு. இவர் எல்லா குற்றச்சாட்டுகளையும் மறுத்து வருகிறார்.

ஆனாலும் கடந்த மாதம் இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிகாகோ, புரூக்ளின் நீதிமன்றங்களில் கெல்லிக்கு எதிராக 2 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. அவற்றில் கெல்லியும், அவரது கூட்டாளிகளும் சிறுமிகளை வேலைக்கு அமர்த்தி, அவர்களை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததுடன் ஆபாச படங்களும் எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

மேலும், வழக்குகளில் தொடர்புடைய சாட்சிகளை மிரட்டியும், பணம் கொடுத்தும் நீதித்துறை நடவடிக்கைக்கு ஊறு விளைவிக்க முயற்சித்ததாகவும் அவர் மீது புகார் எழுந்தது. இந்நிலையில், அவர் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது அவருக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham HospitalThoothukudi Business Directory