» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பத்திரிகையாளர்களின் கருத்துக்காக கைது செய்யக்கூடாது: ஐ.நா. கண்டனம்

புதன் 29, ஜூன் 2022 5:57:20 PM (IST)

பத்திரிகையாளர்கள் என்ன எழுதுகிறார்கள், பேசுகிறார்கள் என்பதற்காக அவர்களை கைது செய்யக்கூடாது என்று ஐ.நா. பொதுச் செயலாளரின் செய்தித் தொடர்பாளர் கருத்து தெரிவித்துள்ளார். 

கடந்த 2018ம் ஆண்டு மத உணர்வுகளைத் தூண்டும் விதமாக ட்விட்டரில் கருத்து பதிவிட்டதாகக் கூறி தனியார் பத்திரிக்கை நிறுவனரும் பத்திரிகையாளருமான முகம்மது ஸுபைர் திங்கள்கிழமை இரவு தில்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், முகம்மது ஸுபைர் கைது செய்யப்பட்டதற்கு ஐ.நா. செய்தித் தொடர்பாளர் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸின் செய்தித் தொடர்பாளர் ஸ்டெஃபானே டுஜாரிக், பத்திரிகையாளர்கள் என்ன எழுதுகிறார்கள், என்ன ட்வீட் செய்கிறார்கள், என்ன பேசுகிறார்கள் என்பதற்காக அவர்களை கைது செய்யக்கூடாது. உலகின் எந்த பகுதியிலும் மக்கள் அனைவரும் பயமின்றி எந்தவித அச்சுறுத்தலுமின்றி தங்கள் கருத்துகளை வெளிப்படையாகக் கூற அனுமதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham Hospital


Thoothukudi Business Directory