» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!

செவ்வாய் 17, மே 2022 5:46:50 PM (IST)

இலங்கை நாடாளுமன்றத்தில் அதிபர் கோத்தபய ராஜபட்ச மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது.

இலங்கை பொருளாதாரத்தை முறையாக வழிநடத்தத் தவறியதால், அதிபா் பதவியை கோத்தபய ராஜபட்ச ராஜிநாமா செய்யக் கோரி நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து, பிரதமராகப் பதவி வகித்து வந்த மகிந்த ராஜபட்ச ராஜிநாமா செய்ததையடுத்து, அதிபா் கோத்தபய ராஜபட்சவால் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், இன்று காலை இலங்கை நாடாளுமன்றம் கூடியது. அதிபர் கோத்தபய ராஜபட்ச மீது நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 68 உறுப்பினர்கள் வாக்களித்த நிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்பட 119 பேர் எதிராக வாக்களித்ததால், நாடாளுமன்றத்தில் தீர்மானம் தோல்வி அடைந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory