» செய்திகள் - விளையாட்டு » உலகம்
அபுதாபியில் பயங்கரவாதிகள் ட்ரோன் தாக்குதல்: இஸ்ரேல் பிரதமர் கண்டனம்
புதன் 19, ஜனவரி 2022 4:12:49 PM (IST)

அபுதாபியில் பயங்கரவாதிகள் நடத்திய ட்ரோன் தாக்குதலுக்கு இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத் தலைநகர் அபுதாபியில் ஆளில்லா விமானமான ட்ரோன் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் 2 இந்தியர்கள், ஒரு பாகிஸ்தானியர் என 3 பேர் உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்துள்ளனர். இந்தத் தாக்குதலில் அபுதாபி சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள எண்ணெய் நிறுவனத்தின் முன் நிறுத்தப்பட்டிருந்த எரிபொருள் டேங்கர்கள் வெடித்து சிதறி தீப்பிடித்தன.
மற்றொரு தாக்குதல் அபுதாபி சர்வதேச விமான நிலையம் மீது நடத்தப்பட்டுள்ளது. இந்த ட்ரோன் தாக்குதலுக்கு, ஏமனில் செயல்படும் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுத்தி கிளர்ச்சி அமைப்பு பொறுப்பேற்றிருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரக தலைநகர் மீதான ட்ரோன் தாக்குதலுக்கு இஸ்ரேல் வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்துள்ளது.
அபுதாபியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவிக்கிறது. அத்துடன், அப்பாவிகளின் உயிரிழப்புக்கு வருத்தம் தெரிவிக்கிறது. இந்திய அரசுக்கும் மக்களுக்கும், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் என செய்தித் தொடர்பாளர் லையர் ஹையாத் பதிவிட்டுள்ளார். இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட்டும், அபுதாபி ட்ரோன் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சீனாவில் 133 பேரின் சாவுக்கு விமானியே காரணம்: கருப்பு பெட்டி மூலம் கிடைத்த பகீர் தகவல்..!!
புதன் 18, மே 2022 4:49:04 PM (IST)

சினிமா உலகத்திற்கு புதிய சார்லி சாப்ளின் தேவை: கேன்ஸ் திரைப்பட விழாவில் உக்ரைன் அதிபர் பேச்சு
புதன் 18, மே 2022 4:22:32 PM (IST)

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!
செவ்வாய் 17, மே 2022 5:46:50 PM (IST)

பிரான்ஸ் புதிய பிரதமராக எலிசபெத் போர்னி நியமனம் : அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உத்தரவு
செவ்வாய் 17, மே 2022 4:55:18 PM (IST)

கோதுமை ஏற்றுமதிக்கு தடை.. இந்தியாவுக்கு சீனா ஆதரவு - ஜி7 நாடுகள் மீது விமர்சனம்!
திங்கள் 16, மே 2022 5:47:02 PM (IST)

நியூயார்க் சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்து வாலிபர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு 10 பேர் பலி!
திங்கள் 16, மே 2022 11:41:26 AM (IST)
