» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஒரே மாதத்தில் 4 முறை வடகொரியா ஏவுகனை சோதனை: வல்லரசு நாடுகள் அதிர்ச்சி!

செவ்வாய் 18, ஜனவரி 2022 5:36:32 PM (IST)வடகொரியா ஒரே மாதத்தில் 4 முறை ஏவுகணைகளை சோதனை செய்துள்ளது, ரஷ்யா, அமெரிக்கா, சீனா போன்ற வல்லரசு  நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

ஏவுகனை சோதனை குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி மீண்டும் அணு ஆயுதங்கள் மற்றும் அபாயகரமான ஏவுகனைகளை சோதித்துள்ளது வட கொரியா. ஏற்கனவே 2017ல் இது போன்று விதிகளை மீறி ஏவுகனை சோதனைகள் நடத்தியதால் அந்த நாட்டுடனான மற்ற நாடுகளின் ஏற்றுமதிக்கு தடைவிதிக்கப்பட்டது. இதன் விளைவாக வட கொரியா கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. 

இருப்பினும் தனது இராணுவ திறனை மேம்படுத்துவதில் வட கொரியா தொடர்ந்து கவணம் செலுத்திவருகிறது. சமீபத்தில் ஒலியைவிட 5 மடங்கு வேகமாக செல்கிற ஹைபர்சோனிக் ஏவுகணை, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதித்ததால் அமெரிக்கா கடும் ஆத்திரமடைந்தது. உடனடியாக, அந்த ஏவுகணை சோதனையில் தொடர்புடைய வடகொரியாவின் 5 மூத்த அதிகாரிகள் மீது ஜோ பைடன் நிர்வாகம் பொருளாதார தடை விதித்து உத்தரவிட்டது. 

இந்த புதிய பொருளாதார தடைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ரயிலில் இருந்து கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் ஏவுகணைகளை சோதனை செய்துள்ளது வட கொரியா. அதன் தொடர்ச்சியாக நேற்று வழிகாட்டி ஏவுகணைகளை சோதனை செய்ததாக, வடகொரியா கூறி உள்ளது. இந்த மாதத்தில் மட்டும் 4 முறை வடகொரியா ஏவுகணைகளை சோதனை செய்துள்ளது. இதனால் ரஷ்யா, அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் பெரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது.


மக்கள் கருத்து

unmai அவர்களுக்குJan 19, 2022 - 09:17:06 PM | Posted IP 108.1*****

Not in Russia, May be china.

unmaiJan 19, 2022 - 04:09:17 AM | Posted IP 162.1*****

Those rockets were most possibly produced in China or Russia. The ash holes of the world.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thoothukudi Business Directory