» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஆப்கானில் அடுத்தடுத்து இருமுறை நிலநடுக்கம்: கட்டிடங்கள் சேதம் ‍ - 26 பேர் பலி!

செவ்வாய் 18, ஜனவரி 2022 4:49:35 PM (IST)ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து இருமுறை ஏற்பட்ட நிலநடுக்கங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்து 26பேர் உயிரிழந்தனர். 

மேற்கு ஆப்கானிஸ்தானில் பிற்பகல் 2 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவானது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல், மாலை 4 மணிக்கு 4.9 ரிக்டர் அளவுகோலில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த இரு நிலநடுக்கங்களில் குடியிருப்பு வீடுகளின் கூரைகள் இடிந்து விழுந்தன. நிலநடுக்கத்தில் சிக்கி 26 பேர் உயிரிழந்தனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட பலர் காயமடைந்து உள்ளனர்.  ஆப்கானில் ஏற்பட்டுள்ள திடீர் நிலநடுக்கம் அந்நாட்டு மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thoothukudi Business Directory