» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஆப்கானில் தலிபான்கள் ஆட்சியில் முதல் முறையாக ஏடிஎம் சேவை துவங்கியது

சனி 15, ஜனவரி 2022 8:40:33 PM (IST)



ஆப்கானில், ஆட்சியை தலிபான்கள் கைப்பற்றியபோது முடக்கப்பட்ட ஏடிஎம் சேவைகள் இன்று தொடங்கியுள்ளது. 

இதுகுறித்து டா ஆப்கானிஸ்தான் வங்கி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ஆப்கானிஸ்தானில் இயங்கி வரும் வணிக வங்கிகள் மற்றும் மத்திய வங்கிகளுடன் நடத்தப்பட்ட தொடர் பேச்சுவார்த்தையின் பயனாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவின் அடிப்படையில், சில வணிக வங்கிகளின் ஏடிஎம் சேவைகள் குறிப்பிட்ட சில நகரப் பகுதிகளில் மட்டும் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

ஆப்கானிஸ்தானில் ஏடிஎம் சேவைகள் தொடங்கவிருப்பது, அந்நாட்டு மக்களுக்கு நல்ல செய்தியாக அமைந்திருப்பதோடு, எதிர்காலத்தில் மேலும் சில சேவைகளும் தொடங்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு ஏடிஎம் சேவை துவங்கியதால், ஏடிஎம் மையங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital






Thoothukudi Business Directory