» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஒமைக்ரான் பரவல்: ஆப்பிரிக்க நாடுகளுக்கு 100 கோடி தடுப்பூசிகள் அனுப்புகிறது சீனா

புதன் 1, டிசம்பர் 2021 5:18:15 PM (IST)

ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், ஆப்பிரிக்க நாடுகளுக்கு  100 கோடி தடுப்பூசிகள் சீனா  அனுப்புகிறது.

தென் ஆப்பிரிக்காவில்தான் கடந்த 24-ம் தேதி முதல்முறையாக ஒமைக்ரான் வகை வைரஸ் உலக சுகாதார அமைப்பால் கண்டறியப்பட்டது. அதன்பின் ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல், பிரி்ட்டன், நெதர்லாந்து ஆகிய நாடுகளிலும் இந்த வகை வைரஸ் கண்டறியப்பட்டது.

இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களில் மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாகவும், தடுப்பூசியை அதிகமாக எதிர்க்கும் தன்மை கொண்டதாகவும் அறிகுறிகளும் தீவிரத்தன்மை கொண்டதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.

இதனால் உலக நாடுகள் தென்ஆப்பிரிக்காவிலிருந்து வருவோருக்கு ஏராளமான பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து காக்கும் வகையில் சீனா இன்னும் சர்வதேச விமானப் போக்குவரத்தைக் கூட தங்கள் நாட்டிலிருந்து தொடங்கவில்லை.இந்நிலையில் ஆப்பிரிக்க நாடுகளுக்கு உதவும் வகையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் நேற்று அறிக்கை வெளியிட்டார்.

சீனா-ஆப்பிரிக்கா கூட்டுறவின் 8-வது மாநாட்டில் அதிபர் ஜி ஜின்பிங் பேசுகையில், "ஆப்பிரிக்க நாடுகள் கரோனா வைரஸையும், உருமாறிய ஒமைக்ரான் வைரஸையும் எதிர்த்துப் போராடும் வகையி்ல் கூடுதலாக 100 கோடி தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்படும்.

ஏற்கெனவே 60 கோடி தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட உள்ளன, அதோடு சேர்த்து கூடுதலாக 100 கோடி தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்படும். ஆப்பிரிக்க நாடுகளின் சுகாதாரத்தை ேமம்படுத்தும் வகையில் 10 சுகாதாரத் தி்ட்டங்களைச் செயல்படுத்தவும், 1500 மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள்” எனத் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory