» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இலங்கையில் தமிழ் பத்திரிகையாளர் மீது தாக்குதல்: ராணுவ வீரர்கள் 3 பேர் கைது

புதன் 1, டிசம்பர் 2021 4:36:45 PM (IST)



இலங்கை முள்ளிவாய்க்காலில் தமிழ்ப் பத்திரிகையாளர் மீது தாக்குதல் நடத்திய ராணுவ வீரர்கள் 3பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு ராணுவத்துடனான இறுதி யுத்தத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் படுகொலை கொல்லப்பட்டனர். குறிப்பாக யுத்தத்தின் கடைசிக்கட்ட களமான முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் கோரக் காட்சிகள் அரங்கேறின. இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நவம்பர் கடைசி வாரத்தில் நடைபெறும். ஆனால் அவ்வாறு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு இலங்கை ராணுவமும், போலீசாரும் அனுமதிப்பது இல்லை. அதையும் மீறி தன்னெழுச்சியாக நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெறுவதால் ராணுவமும், போலீசாரும் எரிச்சலில் இருப்பது வழக்கம்.

இந்நிலையில் முல்லைத்தீவின் முள்ளிவாய்க்காலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நினைவு அஞ்சலியை புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த விஸ்வலிங்கம் விஸ்வசந்திரன் என்ற தமிழ்ப் பத்திரிகையாளர் மீது அங்கிருந்த ராணுவ வீரர்கள் சிலர் கொடூரத் தாக்குதல் நடத்தினர். இரும்பு வேலிக்கம்பிகள் சுற்றப்பட்ட பனைமரக் கட்டைகளைக் கொண்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் கூறினர்.

பத்திரிகையாளர் மீது ராணுவத்தினர் நடத்திய தாக்குலுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக இலங்கை ஊடகத்துறை மந்திரி டலஸ் அழகப்பெருமவுக்கு ஊடக ஊழியர்கள் சங்கங்களின் சம்மேளனம் மின்னஞ்சல் அனுப்பியுள்ளது. இதற்கிடையில் தமிழ்ப் பத்திரிகையாளர் தாக்கப்பட்டது தொடர்பாக 3 ராணுவ வீரர்களை முல்லைத்தீவு போலீசார் கைது செய்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory