» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கனடாவில் பாதுகாப்பு அமைச்சராக தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட அனிதா ஆனந்த் நியமனம்!

புதன் 27, அக்டோபர் 2021 12:38:23 PM (IST)

கனடா நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சராக தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட அனிதா ஆனந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கனடாவில் அண்மையில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான கட்சி  வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கின்றது. இதன்படி, புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ளது. புதிய அமைச்சரவையில் புது முகங்கள் பலருக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி புதிய அமைச்சரவை பட்டியலில் ட்ரூடோ உட்பட 39 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். அதில் 9பேர் புதியவர்கள் என தகவல் வெளியாகி உள்ளது. 

இதன்படி, கனடாவின் புதிய பாதுகாப்பு அமைச்சராக அனிதா ஆனந்த் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். 1990ம் ஆண்டுகளில் முன்னாள் பிரதம மந்திரி கிம் கேம்பலுக்கு பிறகு, கனடாவின் வரலாற்றில் பாதுகாப்பு அமைச்சராகப் பொறுப்பேற்ற இரண்டாவது பெண்மணி அனிதா ஆனந்த் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் டொரன்டோ பல்கலைக்கழகத்தில் சட்டப் பேராசிரியாக பணிபுரிந்தவர். கனடாவின் நோவா ஸ்கோடியா மாகாணத்தில் உள்ள கென்ட்வில் நகரில் பிறந்தவர். தமிழகம் - வேலூரைத் தனது பூர்வீகமாகக் கொண்டவர். இவரது தந்தை தந்தை வைத்தியர். இவரது இயற்பெயர் சுந்தரம் விவேகானந்தன். அனிதாவின் தாயார் சரோஜ் ராம், பஞ்சாப் அமிர்தரஸைச் சேர்ந்தவராவார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam

Black Forest Cakes
Thoothukudi Business Directory