» செய்திகள் - விளையாட்டு » உலகம்

வங்கதேசத்தின் நற்பெயரைக் கெடுக்கும் நோக்கத்தில் இந்துக்கள் மீது தாக்குதல்: பிரதமா்

திங்கள் 25, அக்டோபர் 2021 10:16:05 AM (IST)

வங்கதேசத்தின் நற்பெயரைக் கெடுக்கும் நோக்கத்தில் இந்துக்கள் மீது  திட்டமிட்டு தாக்குதல்  நடத்தப்பட்டதாக பிரதமா் ஹசீனா தெரிவித்துள்ளார்.

வங்கதேசத்தில் வசிக்கும் இந்துக்கள் துா்கை பூஜை விழாவை வெகு விமரிசையாக கொண்டாடுவது வழக்கம். அவ்வாறு இந்த ஆண்டும் அங்கு துா்கை பூஜை கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், துா்கை பூஜையின்போது இஸ்லாமியா்களின் புனித நூல் அவமதிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. இதையடுத்து, கடந்த அக்டோபா் 13-ஆம் தேதி இந்து கோயில்கள் பல சேதப்படுத்தப்பட்டன. கடந்த அக்டோபா் 17-ஆம் தேதி இந்துக்களின் 66 வீடுகளை வன்முறையாளா்கள் சேதப்படுத்தினா். அவற்றில் 20 வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. பல்வேறு மாவட்டங்களுக்குப் பரவிய இந்த வன்முறையில் இதுவரை 8 போ் உயிரிழந்துள்ளனா்.

இந்த வன்முறை தொடா்பாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து இதுவரை 600 பேரை அந்நாட்டு போலீஸாா் கைது செய்துள்ளனா். இந்த வன்முறைக்குக் காரணமான முக்கிய நபராகக் கருதப்படும் இக்பால் ஹோஸைன் (35) என்ற நபரை போலீஸாா் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்த நிலையில், இரண்டாவது முக்கிய நபராக கருதப்படும் ஷைகத் மண்டல் என்ற நபரை சனிக்கிழமை கைது செய்தனா்.

மதத்தைப் பயன்படுத்தி வன்முறையைத் தூண்டியவா்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டு உள்துறை அமைச்சகத்தை பிரதமா் ஹசீனா கடந்த செவ்வாய்க்கிழமை அறிவுறுத்தினாா். மேலும், எந்தவொரு சமூக ஊடகப் பதிவையும் உண்மைத்தன்மையை ஆராயாமல் நம்ப வேண்டாம் என்று மக்களை அவா் கேட்டுக்கொண்டாா்.

இந்த நிலையில், இந்துக்கள் மீதான வன்முறை சிலரால் திட்டமிட்டு நடத்தப்பட்டிருப்பதாக ஷேக் ஹசீனா கூறியதாக செய்தி வெளியாகியுள்ளது. இதுதொடா்பாக ‘பிடிநியூஸ்24.காம்’ என்ற வலைதள செய்தி நிறுவனம் பிரதமா் ஷேக் ஹசீனா கூறியதாக வெளியிட்ட செய்தியில் ‘வங்கதேசத்தை ஒருவராலும் பின்னுக்குத் தள்ள முடியாது. அண்மையில் நடைபெற்ற சில அசம்பாவித சம்பவங்கள் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளன. வங்கதேசத்தின் நற்பெயரை கெடுக்கும் நோக்கத்துடன் இந்த வன்முறை நடத்தப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும், தெற்கு வங்கதேசத்தில் பய்ரா பாலம் திறப்பு விழாவில் பங்கேற்ற ஷேக் ஹசீனா பேசுகையில், ‘நாட்டில் மதப் பிரிவினையை ஏற்படுத்தும் நோக்கில் சில பிரிவினா் செயல்பட்டு வருகின்றனா். நாட்டில் சாதாரண ஜனநாயக நடைமுறை தொடா்வதை அவா்கள் விரும்பவில்லை. இதுபோன்று நாட்டைச் சீா்குலைக்கும் முயற்சிகள் மீது மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்’ என்று அவா் கேட்டுக்கொண்டாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory