» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை வழங்க இந்தியா உறுதி: தலிபான் அரசு

வியாழன் 21, அக்டோபர் 2021 5:17:00 PM (IST)

‛‛மனிதாபிமான அடிப்படையில் ஆப்கானிஸ்தானுக்கு உதவிகளை அளிக்க இந்தியா உறுதியளித்துள்ளது,'' என்று தலிபான் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

மாஸ்கோவில் ரஷ்யா தலைமையில் ஆப்கானிஸ்தான் தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. 10 நாடுகள் பங்கேற்ற இந்தப் பேச்சுவார்த்தை கடந்த அக்., 19ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் பொதுவான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு அவசர மனிதாபிமான மற்றும் பொருளாதார உதவிகளை வழங்குவதில் தங்கள் ஆர்வத்தை பிற நாடுகள் வெளிப்படுத்தின. கூட்டத்தில் பங்கேற்ற இந்தியாவும் மனிதாபிமான அடிப்படையில் உதவிகள் செய்வதாக தெரிவித்துள்ளது.

இந்த பேச்சு வார்த்தையில், இந்தியா மற்றும் தலிபான்கள் பிரதிநிதிகள் முதன்முதலாக நேருக்கு நேர் சந்தித்தனர். இந்திய பிரதிநிதிகளுடனான சந்திப்பு குறித்து தலிபான் செய்தித் தொடர்பாளர் சபிஹுல்லா தெரிவித்ததாவது: பொருளாதாரத்தை வலுப்படுத்துவது தொடர்பாக இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தினோம். ஆப்கானிஸ்தான் மனிதாபிமான நெருக்கடியில் இருப்பதால் உதவிகளை அளிக்க இந்தியா தயாராக இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். மாஸ்கோ பேச்சுவார்த்தையில் அமெரிக்கா உள்ளிட்ட தலிபான் எதிர்ப்பு நாடுகள் பங்கேற்காமல் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes


Nalam Pasumaiyagam


Thoothukudi Business Directory