» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கோவேக்சின் தடுப்பூசிக்கான அங்கீகாரம் குறித்து அடுத்த வாரம் முடிவு‍: உலக சுகாதார அமைப்பு

புதன் 6, அக்டோபர் 2021 12:25:39 PM (IST)

கோவேக்சின் தடுப்பூசிக்கான அங்கீகாரம் அங்கீகாரம் குறித்து அடுத்த வாரம் முடிவெடுக்கப்படும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருந்தது. 

பாரத் பயோடெக் நிறுவனம், தேசிய வைரஸ் ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கிய கோவேக்சின் தடுப்பூசிக்கு இதுவரை உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரம் கிடைக்கவில்லை. பன்னாட்டு பயணங்களுக்கு அனுமதிக்கப்படும் தடுப்பூசி பட்டியலிலும் கோவேக்சின் இடம் பெறவில்லை. கோவேக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் கோரி உலக சுகாதார நிறுவனத்திடம் பாரத் பயோடெக் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.

இதற்கிடையே, கோவேக்சின் தடுப்பூசிக்கான அவசரகால பயன்பாட்டு அங்கீகாரம் குறித்து அக்டோபர் 6ம் தேதி முடிவெடுக்கப்படும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருந்தது.  இந்நிலையில், கோவேக்சின் தடுப்பூசிக்கான அங்கீகாரம் குறித்து அடுத்த வாரம் நடைபெற உள்ள கூட்டத்தில் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் எனஉலக சுகாதார நிறுவனம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory